News March 26, 2025
அருப்புக்கோட்டையில் 500 சிசிடிவி கேமராக்கள்

அருப்புக்கோட்டையில் குற்ற சம்பவங்களை தடுக்க நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இந்நிலையில் அப்பகுதியில் தற்போது வரை சுமார் 500 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை உடனுக்குடன் கண்டறிய இக்கேமராக்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் குற்ற சம்பவங்கள் குறையும் என போலீசார் தெரிவித்துள்ளனர்
Similar News
News August 13, 2025
சிறப்பு அலங்காரத்தில் முத்து மாரியம்மன்

அருப்புக்கோட்டை வடுகர் கோட்டையில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், தீப தூப ஆராதனைகள் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த வடுகர் கோட்டை முத்துமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
News August 13, 2025
ஆக-15 குடியரசு தினமா? – நோட்டீஸால் பரபரப்பு!

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது. இதனையடுத்து காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கம்பிக்குடி ஊராட்சி கோபாலகிருஷ்ணபுரம் பள்ளி வளாகத்தில் ஆகஸ்ட்-15ஐ குடியரசு தினம் எனக் குறிப்பிட்டு கிராம சபைக் கூட்டத்திற்கான துண்டு பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட நிகழ்வு பொது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
News August 13, 2025
சிவகாசியில் மீண்டும் ஒரு கொலை!

சிவகாசி: எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த தர்மலிங்கம்(21), கடந்த 3 நாட்களுக்கு முன் மாயமானார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை தேடி வந்த நிலையில் எம்.புதுப்பட்டி காட்டுப்பகுதியில் தர்மலிங்கம் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. போலீசார் உடலை மீட்டு கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.