News March 26, 2025

பெயரை கேட்டாலே திமுகவுக்கு பயம்: தினகரன்

image

தமிழக அரசியலில் அண்ணாமலை நெருப்பாக செயல்பட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், அண்ணாமலை எதிரிகளுக்கு அக்னியாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், நண்பர்களுக்கும் அண்ணாமலையார் தீபம் போன்று இருப்பதாகவும் பாராட்டியுள்ளார். அண்ணாமலை பெயரை சொன்னாலே திமுக நடுங்கும் அளவுக்கு சிறப்பாக செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 30, 2025

பணக்காரராக உதவும் சில சூப்பர் டிப்ஸ்…

image

யாருக்கு தான் பணக்காரராக வேண்டும் என்ற எண்ணம் இருக்காது. ஆனால், பலருக்கு அது கனவாகவே நின்றுவிடுகிறது. அக்கனவை எட்டிப்பிடிக்க சில டிப்ஸ் ‣ தேவையற்ற ஆடம்பரங்களைத் தவிர்க்கவும் ‣ கடன் வாங்கி வாழ்க்கை நடத்த திட்டமிடாதீர்கள் ‣ சேமிப்புகளில் கவனம் செலுத்துங்கள் ‣ எப்போதும் அவசரத்திற்கு பணம் சேமிப்பதை வழக்கமாக கொள்ளுங்கள் ‣ வாய்ப்புகளுக்காக காத்திருக்காமல் தொடர்ந்து உழைத்திடுங்கள்.

News March 30, 2025

பலி எண்ணிக்கை 2000ஐ தாண்டியது

image

மியான்மரை தலைகீழாக புரட்டிப்போட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஆக அதிகரித்துள்ளது. கட்டட இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கி இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், காயமடைந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிகிச்சை பெற்று வருவதாகவும், 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 30, 2025

BREAKING: பெட்ரோல், டீசல் விலை உயர்வு!

image

சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று (மார்ச் 30) அதிகரித்துள்ளது. அதன்படி, நேற்று(மார்ச் 29) ஒரு லிட்டர் ₹100.90க்கு விற்பனையான பெட்ரோல் இன்று 0.13 காசுகள் உயர்ந்து ₹101.03க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று ஒரு லிட்டர் ₹92.49க்கு விற்பனையான நிலையில், இன்று 0.12 காசுகள் உயர்ந்து ₹92.61க்கு விற்பனையாகிறது.

error: Content is protected !!