News March 26, 2025
எப்போது தேர்தல் நடந்தாலும் மோடியே பிரதமர்: ஓபிஎஸ்

இந்திய நாட்டின் புகழை பிரதமர் மோடி உலக அளவில் கொண்டு சென்றுள்ளதாக ஓபிஎஸ் பாராட்டியுள்ளார். சென்னையில் நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சியில் பேசிய அவர், தனது ஆட்சி திறன் காரணமாக இந்தியாவை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு பிரதமர் மோடி எடுத்து சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எத்தனை முறை தேர்தல் வந்தாலும், பிரதமராக மோடியே வருவார் என்றும் தனது விருப்பத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Similar News
News October 17, 2025
நாளை மிக கவனம்

வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்திற்கு 6 நாள்கள் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள். கவனமாக இருங்கள் நண்பர்களே..!
News October 17, 2025
வயிற்று பிரச்னையை விரட்டும் பூண்டு கஞ்சி!

வாயு தொல்லை, வயிற்றுவலி, வயிற்றுப்புண் போன்ற பிரச்னைகளுக்கு பூண்டு கஞ்சி அருமருந்தாகும். ஒரு குக்கரில் முதலில் எண்ணெய் ஊற்றி மிளகு வெந்தயம், சீரகம் போட்டு தாளிக்கவும். பின்பு பூண்டு சேர்த்து வதக்கி, அதில் அரிசி, தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி சுமார் 6-7 விசில் விட்டு இறக்கவும். இறுதியாக காய்ச்சிய பால் சேர்த்து நன்றாக கிளறினால் கஞ்சி ரெடி.
News October 17, 2025
மீனவர்கள் நலன்: இலங்கை PM-யிடம் பேசிய PM மோடி!

3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியாவை, PM மோடி இன்று சந்தித்து பேசினார். இதுகுறித்து X-ல் பதிவிட்டுள்ள அவர், இலங்கை பிரதமரை வரவேற்பதில் மகிழ்ச்சியடைவதாக குறிப்பிட்டுள்ளார். கல்வி, பெண்களுக்கு அதிகாரமளித்தல், புதுமையான கண்டுபிடிப்புகள், மேம்பாட்டு ஒத்துழைப்பு மற்றும் நமது மீனவர்களின் நலன் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.