News March 26, 2025
திருஷ்டி தோஷம் போக்கும் திருநீறு

‘கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது’ என்பது முதுமொழி. ‘திருஷ்’ என்றால் பார்த்தல் என்று பொருள். மற்றவர்களின் பொறாமை பார்வையால் ஏற்படும் திருஷ்டி உடல் நலன், குடும்ப நலன், வியாபாரம் உள்ளிட்டவற்றை பாதிக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அத்தகைய கண் திருஷ்டிகளை கழிக்கும் ஆற்றல் திருநீறுக்கு உண்டாம். ‘நமசிவாய’ என்று சொல்லி திருநீற்றை நெற்றியில் இட்டுக்கொண்டால் திருஷ்டிகள் விலகும் என்பது ஐதீகம்.
Similar News
News March 30, 2025
ஆசிரியர்களை அனுப்ப பள்ளிகளுக்கு உத்தரவு

பொதுத் தேர்வு பணிக்கு ஆசிரியர்களை அனுப்பவில்லையேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனியார் பள்ளிகளை தேர்வுத்துறை எச்சரித்துள்ளது. தேர்வு பணிகளில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுவர். ஆனால் சில மாவட்டங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனுப்பப்படுவதில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
News March 30, 2025
சூடு பிடிக்கும் அரசியல் களம்

2026ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. ஏற்கெனவே திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட்கள் என வலுவான கூட்டணி இருக்கிறது. அதற்கு எதிராக அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் வலுவான கூட்டணியை கட்டமைக்க முயற்சிக்கின்றன. மேலும், நாதக, தவெக என நான்கு முனை போட்டியாக வரும் தேர்தல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 30, 2025
பள்ளி விடுமுறையில் மாற்றம்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதியுடன் 10ஆம் வகுப்பு தேர்வுகளும் நிறைவு பெறவுள்ளன. 1 முதல் 5ஆம் வகுப்பினருக்கான தேர்வுகளையும் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தேர்வுகள் உண்டு. வெயிலின் தாக்கத்தினால் இதிலும் மாற்றம் வருமா?