News March 26, 2025
மார்ச் 27 முதல் 3 நாட்கள் வெயில் உச்சம் தொடும்

தமிழகத்தில் வரும் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை பல இடங்களில் வெயில் உச்சத்தை தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சேலம், ஈரோடு, திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் வெயில் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் எப்போதும் சதம் அடிக்கும் வேலூர் மாவட்டத்தில், 28ம் தேதி அன்று வெயில் 106 டிகிரியாக இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News March 31, 2025
ஈரான் மீது குண்டு வீசுவோம்.. டிரம்ப் மிரட்டல்

அணுஆயுதம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திடவில்லை எனில், அந்நாடு மீது அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். அமெரிக்காவுடன் ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ளாதபட்சத்தில், அந்நாடு மீது மீண்டும் வரி விதிக்கப்படும் எனவும் கூறியுள்ளார். டிரம்ப் முதல்முறை அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் ஈரானுடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து USA விலகியது குறிப்பிடத்தக்கது.
News March 31, 2025
ஏசி இல்லாம தூங்க முடியலையா?

வெயில் காலம் வந்தாலே பறிபோவது நிம்மதியான தூக்கம் தான். இருக்கும் சூட்டுடன் ஃபேன் காற்றின் சூடும் சேர்ந்தால் தூங்குவது சிரமம் தான். இதற்கு இந்த எளிய வழியை முயலலாமே. டேபிள் ஃபேன் முன்பாக ஐஸ் நிரம்பிய கிண்ணத்தை வைத்துவிட்டால், பேனில் இருந்து வெளிப்படும் காற்று ஐஸின் குளிர்ச்சியை அறைக்குள் பரவவிடும். ஐஸ் உருகினாலும், குளிர்ந்த நீர் தொடர்ந்து அந்த குளிர்ச்சியை அளிக்கும். இதனால் நிம்மதியாக உறங்கலாம்.
News March 31, 2025
JOB ALERT: பேங்க் ஆப் பரோடாவில் வேலைவாய்ப்பு

பேங்க் ஆப் பரோடா வங்கியில் 146 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. கான்டிராக்ட் அடிப்படையில் சீனியர் ரிலேஷன்ஷிப் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்களில் பணியாற்ற இந்த விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு www.bankofbaroda.in. இணையதளத்தில் தொடங்கியுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க ஏப். 15 கடைசி நாளாகும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.