News March 26, 2025

உருவம் தவிர்; உள்ளத்தை பார்

image

ஒருவரின் உருவத்தை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யக் கூடாது. உருவுகண்டு எள்ளாமை வேண்டும் என்கிறது திருக்குறள். ஒவ்வொருவரிடமும் குறை, நிறைகள் இருக்கும். அதற்காக அவர்களைக் குறைத்து மதிப்பீடு செய்யக் கூடாது. யானையின் காதில் புகுந்த எறும்பு, யானையை விட அந்த நேரத்தில் பலசாலியாகிவிடும். அது போல காலநேரம் அனைவருக்கு வரும். சிலருக்கு காலம் தாழ்ந்து வரும், அதற்காக பிறரை கஷ்டப்படுத்தக் கூடாது.

Similar News

News March 31, 2025

ராசி பலன்கள் (31.03.2025)

image

➤மேஷம் – வெற்றி ➤ரிஷபம் – கவலை ➤மிதுனம் – பயம் ➤கடகம் – நட்பு ➤சிம்மம் – தடங்கல் ➤கன்னி – களிப்பு ➤துலாம் – பரிசு ➤விருச்சிகம் – சுகம் ➤தனுசு – வரவு ➤மகரம் – சிக்கல் ➤கும்பம் – எதிர்ப்பு ➤மீனம் – போட்டி.

News March 31, 2025

போட்டித் தேர்வுகளுக்கு நாளை முதல் இலவச பயிற்சி வகுப்பு

image

அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு கல்வி டிவியில் நாளை முதல் ஏப்.4 வரை இலவச பயிற்சி வகுப்பு ஒளிபரப்பப்படவுள்ளது. காலை 7 மணி முதல் 9 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. டிஎன்பிஎஸ்சி, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் நடத்தும் தேர்வுகளுக்கு தயாராக இது உதவும்.

News March 31, 2025

பிரெசிலிடம் தோல்வியை தழுவிய இந்தியா!

image

சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரெசில் அணிக்கும், இந்திய அணிக்கும் இடையேயான எக்ஸிபிஷன் கால்பந்து போட்டி இன்று நடைபெற்றது. இதில், பிரெசில் லெஜண்ட்ஸ் அணியில் 90களின் ஜாம்பவான்களான ரொனால்டினோ, ரிவால்டோ உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களை பார்ப்பதற்காகவே நேரு ஸ்டேடியத்தில் கூட்டம் குவிந்தது. இந்தப் போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை பிரெசில் தோற்கடித்து வெற்றி வாகை சூடியது.

error: Content is protected !!