News March 26, 2025
சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் – குவியும் பாராட்டு

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 97 ரன்களில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், சதமடிக்க வாய்ப்பிருந்தும் அதனை தியாகம் செய்திருப்பது தெரியவந்துள்ளது. இறுதி ஓவரில் விளையாடியபோது, ‘எனது சதத்தை பார்க்காதே, நீ விளையாடு’ என தன்னிடம் கூறியதாக ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார். தனது முதல் சதத்தை தியாகம் செய்த ஸ்ரேயாஸ் ஐயரை நெட்டிசன்கள் பாராட்டித் தள்ளுகின்றனர்.
Similar News
News March 29, 2025
அதிமுக கூட்டணியில் இருந்து விலகல்?

அதிமுக கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம் என்று பூவை ஜெகன்மூர்த்தி பேசியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது. கடந்த தேர்தலில், அவர் தலைமையிலான புரட்சி பாரதம் கட்சி அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. இந்நிலையில், கூட்டணி பற்றி பேசியவர், அதிமுகவுடன் இணைந்து செயல்படுவதாக கூறாமல், பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.
News March 29, 2025
4 சுவர்களுக்குள் விஜய்யின் அரசியல்: கே.பி.முனுசாமி தாக்கு

விஜய் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த அதிமுக, நேற்றைய விஜய்யின் பேச்சுக்குபின், அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். விஜய் மக்களை சந்திக்காமல், 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அவர் மக்களை சந்தித்தால்தான் அரசியலை புரிந்துகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஏழரை சனி

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இன்று முதல் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறவுள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும், கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் ஏழரை சனி நடைபெறவுள்ளது. 2027ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.