News March 26, 2025
பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலம் எது?

ஒப்பந்த தொழில்களில், பெண்கள் அதிகம் வேலை செய்யும் மாநிலமாக மகாராஷ்டிரா (28.7%) முதலிடத்திலும், தமிழ்நாடு (14.2%) இரண்டாவது இடத்திலும் இருப்பது TeamLease நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தலைமைப் பொறுப்புகளை வகிக்கும் பெண்கள் விகிதம் 19% குறைந்துள்ளது. 46% பெண்கள் தொடக்கநிலை ஊழியர்களாக இருப்பதாகவும், வேலைவாய்ப்பின்மை 2.9%லிருந்து 3.2% அதிகரித்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 29, 2025
பாக். கிரிக்கெட் காலி… அடிமேல் அடி!!

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என மண்ணை கவ்விய பாகிஸ்தான், ODI தொடரையும் தோல்வியுடன் தொடங்கியுள்ளது. முதலில் விளையாடிய நியூசிலாந்து, சாப்மேனின் சதத்துடன் 344 ரன்களை குவித்தது. இமாலய இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தானின் பாபர்(78), சல்மான் ஆகா(58) அரை சதம் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொதப்ப 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தோல்வியில் இருந்து பாகிஸ்தான் எழுச்சி பெறுமா?
News March 29, 2025
பிரபல நடிகை திருமணம் செய்து கொள்கிறார்

நடிகை அபிநயாவுக்கு, ஐதராபாத்தைச் சேர்ந்த கார்த்திக் உடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், அவர் தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு, விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த ஜோடிக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அபிநயா பிறவியிலேயே காது கேளாதவர், வாய் பேச முடியாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
News March 29, 2025
அதிமுகவில் மீண்டும் குழப்பம்.. பின்னணி என்ன?

கே.ஏ.செங்கோட்டையனின் டெல்லி பயணத்தால் அதிமுகவில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. <<15890706>>இபிஎஸ்<<>> உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் டெல்லியில் கடந்த 25ஆம் தேதி அமித்ஷாவை சந்தித்தனர். இந்த சந்திப்பில் அரசியல் இல்லை என இபிஎஸ் கூறினாலும், Ex அமைச்சர்கள் சிலரின் பேச்சுகள் அப்படியாக இல்லை. இந்நிலையில், ரகசியமாக டெல்லி சென்றுள்ள செங்கோட்டையன், அங்கு நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.