News March 26, 2025
நடிகராக விரும்பாத மனோஜ்…!

தந்தை பாரதிராஜா இயக்கத்தில் முதன்முதலாக தாஜ்மஹால் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவத்தை பழைய பேட்டி ஒன்றில் <<15885902>>மனோஜ்<<>> நினைவுகூர்ந்தார். அப்போது, ‘அப்பாவுக்கு என்னை நடிகராக்கி பார்க்க ஆசை இருந்தது. ஆனால், நடிகராக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை’ என அவர் கூறினார். கொஞ்சமும் இஷ்டம் இல்லாமல்தான் தாஜ்மஹால் படத்தில் நடித்ததாகவும் மனோஜ் தெரிவித்தார்.
Similar News
News September 15, 2025
வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 118 புள்ளிகள் சரிவுடன், 81,785-ல் நிறைவடைந்தது. அதே நேரத்தில் நிஃப்டி 44 புள்ளிகள் சரிந்து 25,069-ல் வர்த்தகம் முடிந்துள்ளது. DLF, ஏபிபி இந்தியா, HDFC வங்கி உள்ளிட்ட நிறுவங்களின் பங்குகள் சரிந்துள்ளன. அதேநேரம் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்ஃபோசிஸ், வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் உள்ளிட்டவைகளின் பங்குகள் உயர்ந்துள்ளன.
News September 15, 2025
புதிய போட்டோ.. மீண்டும் விஜய் – திரிஷா சர்ச்சை

இன்ஸ்டாகிராமில் திரிஷா பதிவிட்டுள்ள புகைப்படத்தால், விஜய் உடனான கிசுகிசுவில் மீண்டும் அவர் சிக்கியுள்ளார். விமானத்தில் இருக்கும் புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். ஆனால், விஜய்யின் பரப்புரை வாகனத்தில் அவர் இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், தேர்தல் வரை கொஞ்சம் சும்மா இருங்க என்றும் தவெகவினர் சிலர் பதிவிட்டு வருகின்றனர். இப்படியெல்லாம் கமெண்ட் செய்வது தேவை தானா?
News September 15, 2025
தேசத்தை ஆராதிக்கும் சர்வதேச அழகி!

2023-ல் Miss International India Crown வென்ற புனேவை சேர்ந்த காஷிஷ் மெத்வானிக்கு சினிமாவிலும், மாடலிங் துறையில் எக்கச்சக்க ஆஃபர்கள். ஆனால், எந்த Offer-க்கும் அசராத அவர், தன்னை தேச சேவைக்கு அர்ப்பணித்துள்ளார். தான் அழகு மட்டுமில்லை, வீரமகள் என்பதையும் உணர்த்தியுள்ளார் காஷிஷ். 2024-ல் ராணுவ அதிகாரிகளுக்கான CDS தேர்வில் 2-ம் இடம் பிடித்து, தற்போது விமானப்படையில் பணிபுரிகிறார். சல்யூட் மேடம்!