News March 25, 2025
நடிகர் மனோஜ் உயிரிழப்பு – திரை பிரபலங்கள் அஞ்சலி

திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் மாரடைப்பால் இன்று மாலை 6 மணியளவில் காலமானார். மனோஜூக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்ற நிலையில் மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் அனைவரும் சேத்துப்பட்டில் உள்ள அவரது இல்லத்தில் குவிந்துள்ளனர்.
Similar News
News October 16, 2025
ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறிய ஓபிஎஸ்

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை போயஸ் கார்டனில் அமைந்துள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு இன்று நேரில் சென்று தீபாவளி வாழ்த்து கூறினார். இந்நிகழ்வின் போது முன்னாள் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஆனா ரவீந்திரநாத்குமார் உடன் இருந்தார். இந்நிகழ்வில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்று ஓபிஎஸ் தரப்பில் தகவல்.
News October 16, 2025
சென்னை: ராசாத்தி அம்மாள் மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவி ராசாத்தி அம்மாள் சென்னை சிஐடி காலனியில் மகள் கனிமொழி உடன் வசித்து வருகிறார். இந்நிலையில், திடீர் உடல்நலக்குறைவு காரணமாக ராசாத்தி அம்மாள் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உரிய சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கப்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
News October 16, 2025
சட்டப்பேரவைக்கு கருப்பு சட்டையில் வந்த எம்எல்ஏ-க்கள்

பாமக சட்டமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து ஜி.கே.மணி (ம) கொறடாவை மாற்றக் கோரிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுக்கும் நிலையில், பாமக தலைவர் அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தில் உள்ள நிலையில், இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.