News March 25, 2025

தொடர் விடுமுறை: குவிந்த கூடுதல் பஸ்கள்!

image

ரம்ஜான் பண்டிகை வரும் 31ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய சனி, ஞாயிறும் விடுமுறை என்பதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லவுள்ளனர். இவர்களின் வசதிக்காக, கிளாம்பாக்கத்தில் இருந்து 990 பஸ்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல, கோயம்பேட்டில் இருந்து தி.மலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூர் ஆகிய இடங்களுக்கு 100 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Similar News

News March 29, 2025

‘எம்புரான்’ ₹100 கோடி வசூல்!! மலையாளத்தில் புதிய சாதனை

image

மோகன்லாலின் ‘எம்புரான்’ படம் வெளியாகி 2 நாள்களில் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. ‘லூசிபர்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எம்புரான் உருவாக்கப்பட்டது. மலையாளப்படம் ₹100 கோடியை இரண்டே நாள்களில் வசூல் செய்வது இதுவே முதல்முறை. அடுத்தடுத்து விடுமுறை வருவதால் எம்புரானின் கலெக்‌ஷன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 29, 2025

16 ஆயிரம் கி.மீ தாண்டி பீட்சா ஆர்டர் போட்டவர்!

image

சாதாரணமாக, 3 தெரு தள்ளி ஆர்டர் போட்டாலே டெலிவரிக்கு, ரொம்ப நேரம் ஆகும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவர் 16,000 கி.மீ தாண்டி அயர்லாந்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அவரின் சொந்த ஊரான, டப்ளின் நகரை விட்டு வந்ததை மனுஷன் மறந்து விட்டார். இதில், வேடிக்கை என்னவென்றால், இவரின் ஆர்டரை ரெடி செஞ்சி, டெலிவரிக்கும் புறப்பட்டு விட்டது அந்த ஹோட்டல். நீங்க இதுமாதிரி ஏதாவது பண்ணியிருக்கீங்களா?

News March 29, 2025

வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகள் 6% குறைப்பு:CM

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையத்தின் விழிப்புணர்வு, கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அதில் முழுமையான அர்ப்பணிப்புடன் சமூக நீதியை நிலைநாட்டும் அரசாக திமுக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகள் 6% குறைந்துள்ளதாகவும் கூறினார். SC, ST கல்வி மேம்பாட்டிற்காக ₹2,798 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் கூறினார்.

error: Content is protected !!