News March 25, 2025
நடிகர் மனோஜ் மறைவு: ஸ்டாலின் இரங்கல்

நடிகர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பல திரைப்படங்களில் நடித்து தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்ட மனோஜ், சிறு வயதில் மறைந்தது பேரதிர்ச்சியளிப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும், மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 29, 2025
குணால் கம்ராவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்த விவகாரத்தில் ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மீது 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவின் ஜல்கான் மேயர், ஹோட்டல் உரிமையாளர் மற்றும் தொழிலதிபர் ஒருவர் என மூவர் கர் காவல்நிலையத்தில் அளித்த புகார்களின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குணால் கம்ராவுக்கு வரும் 7ஆம் தேதி வரை சென்னை ஐகோர்ட் முன் ஜாமின் வழங்கியுள்ளது.
News March 29, 2025
‘எம்புரான்’ ₹100 கோடி வசூல்!! மலையாளத்தில் புதிய சாதனை

மோகன்லாலின் ‘எம்புரான்’ படம் வெளியாகி 2 நாள்களில் உலகம் முழுவதும் ₹100 கோடி வசூலை வாரிக்குவித்துள்ளது. ‘லூசிபர்’ படத்துக்கு கிடைத்த பெரும் வரவேற்பை அடுத்து, மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் எம்புரான் உருவாக்கப்பட்டது. மலையாளப்படம் ₹100 கோடியை இரண்டே நாள்களில் வசூல் செய்வது இதுவே முதல்முறை. அடுத்தடுத்து விடுமுறை வருவதால் எம்புரானின் கலெக்ஷன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 29, 2025
16 ஆயிரம் கி.மீ தாண்டி பீட்சா ஆர்டர் போட்டவர்!

சாதாரணமாக, 3 தெரு தள்ளி ஆர்டர் போட்டாலே டெலிவரிக்கு, ரொம்ப நேரம் ஆகும். ஆனால், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் ஒருவர் 16,000 கி.மீ தாண்டி அயர்லாந்தில் பீட்சா ஆர்டர் செய்துள்ளார். அவரின் சொந்த ஊரான, டப்ளின் நகரை விட்டு வந்ததை மனுஷன் மறந்து விட்டார். இதில், வேடிக்கை என்னவென்றால், இவரின் ஆர்டரை ரெடி செஞ்சி, டெலிவரிக்கும் புறப்பட்டு விட்டது அந்த ஹோட்டல். நீங்க இதுமாதிரி ஏதாவது பண்ணியிருக்கீங்களா?