News April 2, 2024
கணினி மூலம் பணி ஒதுக்கீடு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை கணினி மூலம் 2 ஆம் கட்ட பணி ஒதுக்கீடு செய்யும் பணி குறித்து ஆட்சியர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் தேர்தல் பொதுப்பார்வையாளர் போர் சிங் யாதவ் கலந்து கொண்டார்.
Similar News
News August 15, 2025
அரியலூர்: 31 காவலர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கல்

அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்ற 79வது சுதந்திர தின விழாவில், 31 காவலர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி வழங்கினார். குற்றவாளிகளைக் கண்டறிதல் குழந்தை கடத்தல் போதைப் பொருள் ஒழிப்பு ஆகியவற்றில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
News August 15, 2025
தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆட்சியர்

அரியலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, ஆட்சியரும் மாவட்ட எஸ்பி விஷ்வேஷ் பா.சாஸ்திரி ஆகியோர் திறந்த ஜீப்பில் சென்று, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டனர். மேலும், காவல்துறையில் சிறப்பாகப் பணி புரிந்த காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
News August 15, 2025
அரியலூர்: 28 அரசு காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ் நாடு கூட்டுறவு துறையின் கீழ் அரியலூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ’28’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <