News March 25, 2025

3 நாட்கள் தொடர் விடுமுறை

image

வரும் ஞாயிறு முதல் 3 நாட்கள் தொடர் விடுமுறையாகும். மார்ச் 29 (சனி), மார்ச் 30 (ஞாயிறு), மார்ச் 31 (திங்கள்) ரம்ஜான் என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஏப்.1 (செவ்வாய்) வங்கிக் கணக்கு முடிவு நாள் என்பதால் வங்கிகளுக்கு மட்டும் விடுமுறை நாளாகும். இதையும் சேர்த்துக் கொண்டால் மொத்தம் 4 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த லீவுல உங்கள் பிளான் என்ன?

Similar News

News March 29, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: ஒப்புரவறிதல் ▶குறள் எண்: 220 ▶குறள்: ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்க துடைத்து. ▶பொருள்: இருப்பதைப் பிறர்க்குக் கொடுத்துவிட்டால், நாளை நமக்குத் தீமை வருமே என்று சொன்னால், தன்னையே விலையாகக் கொடுத்து அந்தத் தீமை வாங்கத்தக்கதே.

News March 29, 2025

சங்கிகளின் அஜெண்டா.. ‘L2’ஐ புகழும் கேரள காங்.

image

‘L2: எம்புரான்’ படம் சங்கிகளின் அஜெண்டாவை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதாக கேரள காங். தெரிவித்துள்ளது. கேரளாவை பிளவுபடுத்துவதற்கும், கடல்வளம், துறைமுகங்களை கைப்பற்றுவதற்கு இதே அஜெண்டா பின்பற்றப்படுவதாகவும் கூறியுள்ளது. ‘L2: எம்புரான்’ படம் குஜராத் கலவரத்தையும், மத்திய அரசு CBI, ED போன்ற எஜென்சிகளை தவறாக பயன்படுத்துவதாகவும் மறைமுகமாக விமர்சித்துள்ளது.

News March 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶மார்ச் – 29 ▶பங்குனி – 15 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 01:30 AM & 09:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 09:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 01:30 PM – 03:00 PM ▶குளிகை: 06:00 AM – 07:30 AM ▶திதி: அமாவாசை ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: மகம் ▶நட்சத்திரம் : உத்திரட்டாதி இ 8.15

error: Content is protected !!