News March 25, 2025
IPL: பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்…!

GT – PBKS அணிகள் அகமதாபாத் மைதானத்தில் சற்றுநேரத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. கொல்கத்தாவுக்காக கடந்த முறை கோப்பையை வென்று கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையில் பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது. கில் தலைமையில் குஜராத் அணி விளையாடவுள்ளது. இரு அணிகளும் இதுவரை 5 போட்டிகளில் மோதிய நிலையில், குஜராத் 3 முறையும், பஞ்சாப் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய ஆட்டத்தில் வெல்லப் போவது யார்?
Similar News
News January 10, 2026
வரலாற்றில் இன்று

*1863 – உலகின் முதல் நிலத்தடி ரயில் சேவை லண்டனில் தொடங்கியது.
*1917 – பெண்களுக்கு வாக்குரிமை கேட்டு வெள்ளை மாளிகைக்கு எதிராக போராட்டம் தொடங்கியது.
*1962 – பெருவில் சுழன்றடித்த சூறாவளியில் 4,000 பேர் பலியாகினர்.
*1974 – பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் பிறந்ததினம்
*1990 – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பிறந்ததினம்
News January 10, 2026
விஜய் படம் எப்போ வந்தாலும் கொண்டாட்டம்தான்: SK

‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போனது எதிர்பாராத ஒன்று என சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விஜய் படம் எப்போது வெளியானாலும் அன்றைய தினம் கொண்டாட்டம்தான் என்றும் ‘ஜனநாயகன்’ சென்சார் பிரச்னை கோர்ட்டில் இருப்பதால் அதுகுறித்து பேசக்கூடாது எனவும் கூறியுள்ளார். மேலும் சென்சாரில் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாது என்றவர், படம்பார்க்கும் உறுப்பினர்களின் கருத்தை பொறுத்து மாறுபடும் என குறிப்பிட்டார்.
News January 10, 2026
ஸ்லீப்பர் பஸ்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

ஸ்லீப்பர் பஸ்களில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய அரசு புதிய விதிகளை விதித்துள்ளது. அதன்படி இனிமேல், ஸ்லீப்பர் பஸ்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் (அ) மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டுமே உருவாக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளார். பஸ்களில் அனைத்து வகையான பாதுகாப்பு உபகரணங்களும் பொருத்தப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


