News March 25, 2025
மார்ச் 29 ம் தேதி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

கரூர் காந்தி கிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் காலை 9 முதல் மாலை 4 மணி வரை என் கல்லூரி கனவு எனும் உயர்கல்வி வழிகாட்டு ஆலோசனை நிகழ்ச்சி வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதில் உயர்கல்வி வழிகாட்டி நிபுணர்கள் கலந்துகொள்ள உள்ளனர். எனவே பிளஸ்-2 பயின்று வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்களது EMIS எண் விவரத்தினை கொண்டு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News November 4, 2025
கரூர் டவுன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை

கரூர், 33/11 பாலம்மாள்புரம் துணைமின் நிலையத்தில் உள்ள 11 கிலோ மாரியம்மன் கோவில் பீடர், புதுத்தெரு, ஆலமரதெரு, கருப்பாயிகோவில் தெரு, மாவடியான் கோவில் தெரு. ஐந்துரோடு, தேர்வீதி, குருநாதன் தெரு., அனந்தராயன் கோவில் தெரு, மார்கெட், சர்ச் கார்னர், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வினியோகம் இருக்காது. என உதவி செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
News November 3, 2025
கரூர்: மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்

கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த கண்ணன் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து புதிய கரூர் மாவட்ட வருவாய் அலுவலராக விமல் ராஜ் என்பவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட மாவட்ட வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள் பலரும் நேரில் சந்தித்து பணி சிறக்க வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.
News November 3, 2025
கரூர்: கரண்ட் பில் அதிகமா வருதா?

கரூர் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987-94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்!


