News March 25, 2025
புதிய வருமான வரி மசோதா மீது எப்போது விவாதம்?

மாத ஊதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக, ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை சம்பாதிப்பவர்கள் வருமான வரி செலுத்த வேண்டாம் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய வருமான வரி மசோதா மார்ச் 13ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீதான விவாதம், வரும் மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 27, 2025
தமிழகத்திற்கான நிதி.. மத்திய அரசு வழங்க வலியுறுத்தல்

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. அதோடு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் இணைந்து சுமூக தீர்வு காணவும், நிலுவையில் உள்ள நிதியை முன்னுரிமை அடிப்படையில் விடுவிக்க வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு ₹2,152 கோடி நிதி நிலுவையில் உள்ளது.
News March 27, 2025
மரண வீட்டில் ஊடகங்கள் காசு பார்ப்பதா?

சினிமா பிரபலங்களின் வீட்டு துக்க நிகழ்வை, ஊடகங்கள் ஒளிபரப்பு செய்வதை தவிர்க்குமாறு நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒருவரின் துயரை காசாக்க வேண்டுமா எனவும், ஒருவரின் மரணத்தை கொண்டாடும் மனநிலைக்கு வந்துவிட்டோமா எனவும் அந்த சங்கம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது. மரண வீடுகள் என்பது துயரத்தை பகிர்ந்துகொள்ளவும், மௌனிக்கப்படவும் வேண்டிய இடம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 27, 2025
இதெல்லாம் மார்ச் 31-க்குள் செய்ய வேண்டியவை!

புதுப்பிக்கப்பட்ட ITR படிவத்தை மார்ச் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரியை சேமிக்க விரும்பினால் அதற்குள் சில முதலீடுகள் செய்து கொள்ளலாம். அதே போல், PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் பதிவு செய்வதற்கும், பெண்கள், சிறுமிகள் மட்டுமே முதலீடு செய்யும் மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தின் கீழ் முதலீடு செய்வதற்கும் அன்றைய தினமே கடைசி நாளாகும். Share It.