News March 25, 2025
தமிழ்நாட்டில் ஜனசேனா? – பவன் போடும் கணக்கு!

ஆந்திர துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டில் தனது கட்சியை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக எதிர்ப்பு அரசியலை கையில் எடுத்துள்ள அவர், இங்குள்ள தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை பெற பிளான் போட்டுள்ளாராம். திமுகவில் இருந்து சஸ்பெண்ட்டான வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், தெலுங்கு சமுதாய தலைவர்களிடம் பவன் தரப்பில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Similar News
News March 29, 2025
வங்கிகளுக்கு விடுமுறை இல்லை

ரம்ஜான் தினமான மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் திறந்திருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ஆம் தேதி கணக்குகள் முடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு அதே தினத்தில் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இருப்பினும், வங்கிகள் விடுமுறையின்றி செயல்பட்டு கணக்குகளை முடிக்க வேண்டும் என்று RBI உத்தரவிட்டுள்ளது.
News March 29, 2025
நீங்க எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?

இப்போதெல்லாம் காலை கண் விழிப்பதே போனின் அலாரம் சத்தம் கேட்டு தான். கையுடன் போனை ஒட்டிவைத்தது போல ஆகிவிட்டது நிலைமை. ஒரு இந்தியர், சராசரியாக ஒரு நாளில் 5 மணி நேரம் வரை போனை பார்த்துக்கொண்டு இருக்கிறார். அதே நேரத்தில், 2024 ஆம் ஆண்டில், ஒட்டுமொத்தமாக இந்தியர்கள் 1.1 லட்ச கோடி மணி நேரத்தை போனை பார்த்து செலவழித்திருப்பதாக கூறப்படுகிறது. நீங்க ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் போன் பாக்குறீங்க?
News March 29, 2025
இன்னும் ஒரு மணி நேரத்தில் ‘GBU’வின் மாஸ் அப்டேட்!!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், உருவாகி வருகிறது அஜித்தின் ‘குட் பேட் அக்லி’. படத்தின் Second Single ப்ரோமோ இன்று மாலை 5:50 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பவே ரசிகர்கள் இது என்ன மாதிரி பாட்டா இருக்கும் தெரியலையே என ஆர்வத்துடன் உள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளிவர இருக்கிறது.