News March 25, 2025
தேவநாதன் யாதவ் சொத்துக்கள் ஏலம்?

உங்கள் சொத்துக்களை ஏலம் விட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்கலாமா? என்பதற்கு பதிலளிக்கும்படி, தேவநாதன் யாதவிற்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நிதி நிறுவனம் நடத்தி ₹24.50 கோடி மோசடி செய்ததாக அரசியல்வாதியான தேவநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது முதல் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது 2ஆவது முறையாக ஜாமின் கோரிய மனு மீதான விசாரணையில், கோர்ட் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 29, 2025
காலையில் எழுந்ததுமே….

எப்போதும் காலையில் செய்யும் சில வேலைகள் நம்மை நாள் முழுக்க உற்சாகமாக இருக்க செய்யும். அவற்றில் சில, * உங்களின் காலை கடன்களை முடியுங்கள் * நாளில் மேற்கொள்ளவுள்ள வேலைகளைப் பட்டியலிடுங்கள் * உடற்பயிற்சி செய்யுங்கள் * உங்களுக்கு பிடித்த மெல்லிய இசையை கேளுங்கள் * மாணவர்கள் காலையில் படித்தால், நினைவாற்றல் கூடும் * எழுந்தவுடன் தண்ணீர் அருந்துங்கள், அது உடலின் உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக்கும்.
News March 29, 2025
அதிமுகவுக்கு தவெக மாற்று?

2026 தேர்தலில் DMK- TVK இடையேதான் போட்டி என்று விஜய் பேசியிருக்கிறார். அதாவது அதிமுகவுக்கு தவெக மாற்று என்ற பொருளில் பேசியுள்ளார். இதுவரை ஒரு தேர்தலில் கூட நிற்காத விஜய், தனது கட்சியின் வாக்கு சதவீதத்தை நிரூபிக்கவில்லை. அப்படி இருக்கையில், கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவுக்கு மாற்று என எந்த அடிப்படையில் அவர் பேசுகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
News March 29, 2025
மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்!

மியான்மரில் இன்றும் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.2ஆக பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று காலை அடுத்தடுத்து (7.7 & 6.4) நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 250 பேர் பலியான நிலையில், ஆயிரக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்களை மீட்கும் காட்சிகள் காண்போரைக் கண்கலங்க வைக்கிறது.