News March 25, 2025
காமராஜர் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு சிறப்பு சலுகை

புதுவையில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில் பேசிய அமைச்சர் திருமுருகன், “குடிசை மாற்று வாரியம் மூலம் காமராஜர் கல்வீடு கட்டும் திட்டத்தில் Phase I to Phase VI வரை உள்ள பயனாளிகள் வீடுகட்ட தவறியவர்கள் & வீடுகட்டி முடிக்கப்படாத பயனாளிகளிடமிருந்து அசல் தொகையை மட்டும் பெற்று கொண்டு அவர்களது அசல் பாத்திரங்களை திருப்பி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 8,638 குடும்பங்கள் பயன் பெறும்,” என்றார்.
Similar News
News October 22, 2025
காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் ஆய்வு

காரைக்கால் மாவட்டத்தில் நேற்று முதல் இடை விடாமல் கனமழையானது பெய்ததால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி பாதிப்படைந்தது. இதனை அடுத்து பாதிப்படைத்த பகுதிகளை காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லட்சுமி சௌஜன்யா மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர்கள் இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
News October 21, 2025
BREAKING: புதுவையில் நாளை விடுமுறை அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழையின் காரணமாக நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளிக்கு விடுமுறை அறிவிப்பதாக அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
News October 21, 2025
புதுச்சேரி: கொட்டும் மழையில் முதல்வர் அஞ்சலி

புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் கொட்டும் கன மழையில், இன்று நடைபெற்ற காவலர் நினைவு தின நிகழ்ச்சியில், கலந்துகொண்ட முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் மழையில் நனைந்தபடி பணியின்போது உயர் நீத்த காவலர்களுக்கு, மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினார்கள்.