News April 2, 2024
கா்ப்பிணிகள் நிதியுதவி திட்டம்: புதிய நடைமுறை அமல்

தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு நிதியுதவி வழங்குவதில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. 5 தவணைகளாக வழங்கப்பட்டு வந்த ₹14000 நிதியுதவி, இனி 3 தவணைகளில் வழங்கப்பட உள்ளது. கா்ப்ப காலத்தின் 4வது மாதத்தில் ₹6000, குழந்தை பிறந்த 4வது மாதத்தில் ₹6000, குழந்தை பிறந்த 9வது மாதத்தில் ₹2000 ஆக வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேறு காலத்தில் 3, 6ஆவது மாதங்களில் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
Similar News
News November 9, 2025
கோதுமை விவகாரம்: இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி

ரேஷன் கடைகளில் கோதுமை இல்லை என <<18241871>>EPS<<>> வைத்த குற்றச்சாட்டுக்கு, கோதுமை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சக்கரபாணி பதிலளித்துள்ளார். இம்மாதத்திற்கான கோதுமை ஒதுக்கீடு நவ.15-க்குள் ரேசன் கடைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், TN-க்கு அதிக அளவில் கோதுமை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருவதாகவும், அதை மத்திய அரசு செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News November 9, 2025
Kidney Stone போகணுமா? Roller Coaster-ல போங்க!

பெரிய ரோலர் கோஸ்டர்களில் சவாரி செய்யும்போது 5mm-க்குள் உள்ள கிட்னி கற்கள் வெளியேறுவதாக 2016-ல் மிச்சிகன் ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ரோலர் கோஸ்டரின் முன் பக்க இருக்கையில் உட்காருவதால் வெறும் 17% கற்கள் தான் வெளியேற வாய்ப்பிருக்கிறதாம். ஆனால் கடைசி சீட்டில் அமரும்போது 64% கற்கள் வெளியேறக்கூடும் என்கின்றனர். புவி ஈர்ப்பு விசையால் இது நடப்பதாக கூறுகின்றனர். SHARE.
News November 9, 2025
வரலாறு படைத்தார் மெஸ்ஸி

கால்பந்து அரசன் மெஸ்ஸி, 400 Assists கொடுத்த 2-வது வீரர் என்ற வரலாற்றை படைத்தார். ஒரு பிளேயர் பாஸ் செய்யும் பாலை வாங்கி மற்றொரு பிளேயர் அதை கோல் போட்டால், பாலை பாஸ் செய்த பிளேயருக்கு 1 Assist கிடைக்கும். அவ்வகையில், இதுவரை அதிக Assists (404) உடன் முதலிடத்தில் உள்ளார் மறைந்த ஹங்கேரி வீரர் ஃபெரென்க் புஸ்காஸ். மெஸ்ஸிக்கு போட்டியாக பார்க்கப்படும் ரொனால்டோ 287 Assists மட்டுமே கொடுத்துள்ளார்.


