News March 25, 2025
ஹூசைனி மறைவிற்கு பவன் கல்யாண் இரங்கல்!

பிரபல கராத்தே மாஸ்டர் ஷிஹான் ஹூசைனியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த இரங்கல் பதிவில், அவரிடம் தான் கராத்தே பயிற்சி பெற்ற நினைவுகளை பவன் கல்யாண் பகிர்ந்து கொண்டுள்ளார். ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நள்ளிரவு 1.45 மணியளவில் ஹுசைனி காலமானார். அவருக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News March 31, 2025
மகிழ்ச்சிக்கு 5 நிமிடங்கள்

தினசரி 5 நிமிடங்கள் ஒதுக்கி இப்பழக்கங்களை கடைப்பிடியுங்கள்: *1 நிமிடம் நிதானமாக சுவாசியுங்கள். அமைதி ஆற்றலை உள்ளிழுத்து, அன்பை வெளியிடுங்கள் *கிடைத்துள்ள ஆசிர்வாதங்களுக்காக நன்றி கூறுங்கள் *நாளை நன்றாகவே இருக்கும் என்று `ஆல் இஸ் வெல்’ சொல்லுங்கள் *கடந்தகால கசப்புகளை போக விடுங்கள், நாளை நமதே *நீங்கள் காணும் ஒவ்வொருவரிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.
News March 31, 2025
லோன் வாங்குபவர்களுக்கு எச்சரிக்கை!

நாளை முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. ஒரு நேரத்தில், ஒருவர் மூன்று வங்கிகள் மற்றும் நிதிநிறுவனங்களில் இனி கடன் பெற முடியாது என்ற விதியை RBI கொண்டு வந்துள்ளது. கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் default ஆவதை தடுக்க இந்த விதி அமல்படுத்தப்படுகிறது. கடந்த டிசம்பர் நிலவரப்படி, சுமார் 45 லட்சம் பேர் 3-க்கு மேற்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கியுள்ளனர். லோன் வாங்குமுன் இதை கவனத்தில் கொள்ளவும்.
News March 31, 2025
BREAKING: மதுரையில் பிரபல ரவுடி என்கவுண்ட்டர்

மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ரவுடி சுபாஷ் சந்திர போஸ் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோப்பில் கூட்டாளிகளுடன் இருந்த ரவுடியை பிடிக்க முயன்றபோது அவர் தாக்கியதால் என்கவுண்ட்டர் செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ரவுடி கிளாமர் காளி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சுபாஷ் சந்திர போஸை போலீசார் தேடிவந்த நிலையில், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.