News March 25, 2025
சொத்து வரி உயர்வு: அமைச்சர் நேரு விளக்கம்

சொத்து வரி உயர்வு குறித்து சட்டப்பேரவையில் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த கே.என்.நேரு, அதிமுக ஆட்சியில் 50%, 100%, 200% என சொத்து வரி உயர்த்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு 25%, 50%, 100% என்ற அளவில் அதிகரிக்க முதலமைச்சர் அறிவுறுத்தினார் எனக் கூறிய அவர், மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் சொத்து வரி உயர்வு என்பது மிகவும் குறைவாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 31, 2025
மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

இந்தியா- இலங்கை மீனவப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் ராமலிங்கம் உறுதியளித்துள்ளார். இலங்கை சென்ற ராமேஸ்வரம் மீனவப் பிரதிநிதிகள் அமைச்சர் ராமலிங்கத்தை சந்தித்து பேசினர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் மீனவர் பிரச்னைக்கு இரு நாட்டு அரசுகளும் நிரந்தர தீர்வு காண வேண்டும் அவர்கள் கோரிக்கை வைத்த நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
News March 31, 2025
IPL: டூப்ளசிஸ் தான் டாப்..!

SRHக்கு எதிரான நேற்றைய போட்டியில் டூப்ளசிஸ் 50 ரன்களை எடுத்தார். இதன்மூலம், 2020 முதல் IPL-ல் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தை பிடித்தார். 76 போட்டிகளில் 2,798 ரன்களை அடித்துள்ளார். இந்த பட்டியலில் ஷுப்மன் கில் (2,788) 2ஆம் இடத்திலும், கே.எல்.ராகுல் (2,719) 3ஆம் இடத்திலும், கோலி (2,433) 4ஆம் இடத்திலும் உள்ளனர். ரோஹித் ஷர்மா (1,738) 14ஆம் இடத்தை பிடித்துள்ளார்.
News March 31, 2025
திமுக பார்க்காத எதிரிகளா? ஸ்டாலின்

மத்திய பாஜக அரசின் சதித் திட்டங்களுக்கு தமிழ்நாடும், திமுகவும் முதன்மை தடையாக இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, அத்தடையை அகற்ற பல்வேறு வடிவங்களில் அவர்கள் எதிரிகளை உருவாக்குவார்கள் எனவும், நாடகங்களை நடத்தி திசை திருப்ப பார்ப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த மாதிரியான நாடகங்களை 75 ஆண்டுகளாக, திமுக பார்த்துக் கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.