News March 25, 2025

கடலூர்: வேலைவாய்ப்பு முகாம் ஒத்திவைப்பு

image

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் வாழ்வாதார இயக்கத்துடன் இணைந்து 29.03.2025 (சனிக்கிழமை) அன்று பெண்ணாடம் லோட்டஸ் இன்டர்நேஷனல் பள்ளியில் நடத்தப்படவிருந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News

News October 31, 2025

கடலூர்: ஹோட்டல் அமைக்க விண்ணப்பிக்கலாம்

image

கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிறுதானிய உணவு உணவகம் அமைத்திட மகளிர் சுய உதவிக்குழுக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். தகுதியுள்ள மகளிர் சுய உதவி குழுவினர் வரும் நவ.10-ம் தேதி மாலை 5 மணிக்குள் கடலூர் மகளிர் திட்ட அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

News October 31, 2025

கடலூர்: அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி

image

நெய்வேலி 17-வது வட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36). இவர் என்.எல்.சி.யில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரிடம் ரூ.20 லட்சம் பெற்று மோசடியில் ஈடுபட்டார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கடலூர் எஸ்.பி. ஜெயக்குமாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து எஸ்.பி. உத்தரவின் பேரில், கடலூர் குற்றப்பிரிவு போலீசார் நேற்று வழக்கு பதிந்து ரூ.20 லட்சம் மோசடி செய்த மணிகண்டனை கைது செய்தனர்.

News October 31, 2025

கடலூர்: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

error: Content is protected !!