News March 25, 2025

இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற இயக்குநர்!

image

ஆஸ்கர் விருது வென்ற பாலஸ்தீன இயக்குநர் ஹம்தான் பல்லால், இஸ்ரேல் ராணுவத்தால் தாக்கப்பட்டு கைதாகி இருக்கிறார். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனின் ‘வெஸ்ட் பேங்க்’ பகுதியில் இத்தாக்குதல் நடந்துள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ஹம்தான் தற்போது எங்கு இருக்கிறார் என்ற தகவல் இல்லை என்றும் கூறப்படுகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீன மோதலின் கொடூரங்களை மையமாக கொண்ட ‘No Other Land’ படத்தை ஹம்தான் இயக்கினார்.

Similar News

News October 16, 2025

பழைய பென்ஷன் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

image

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ₹1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 16, 2025

உதவி பேராசிரியர் தேர்வு.. நாளை முதல் Apply பண்ணுங்க

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவ.10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

News October 16, 2025

இனி Lip Balm வேண்டாம்; இத யூஸ் பண்ணுங்க

image

குளிர்காலத்தில் உதடுகள் வரண்டு போவதால் வெடிப்புகள் ஏற்படும். இது உங்கள் முக அழகை கெடுக்கிறது. இதற்காக சிலர் லிப் பாம் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவை தற்காலிக தீர்வாகவே இருக்கிறது. உங்கள் உதடுகள் மென்மையாக மாற லிப் பாமுக்கு பதில் பாதாம் எண்ணெய் லேசாக தடவிப் பாருங்கள். இதை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும். அத்துடன் தேவையான அளவு தண்ணீர் அருந்துவதும் அவசியமாகிறது. SHARE.

error: Content is protected !!