News March 25, 2025

ஜெ.வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சிபிசிஐடி சம்மன்

image

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கொடநாடு எஸ்டேட்டின் முன்னாள் பங்குதாரரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகனுமான சுதாகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் தனிப்படை முன்பு வரும் மார்.27ஆம் தேதி சுதாகரன் ஆஜராகும்படி கோவை சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. இதனையடுத்து அவர் அன்று ஆஜராவார் என கூறப்படுகிறது.

Similar News

News March 31, 2025

கோவை: ரேஷன் கார்டில் கைரேகை வைக்கலயா?

image

கோவை மாவட்டத்தில் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் இன்றைக்குள் (மார்ச்.31) பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும். ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம். (உடனே SHARE பண்ணுங்க)

News March 30, 2025

கோவை: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு!

image

கோவையில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில் செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால் தர்பூசணியை பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்து தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 30, 2025

சிலிண்டர் எடை குறைவு: ரூ.1 லட்சம் அபராதம்

image

கோவையைச் சேர்ந்தவர் நிர்மல் காளிநாத். இவர் வீட்டிற்கு சிலிண்டர் வாங்கியுள்ளார். சிலிண்டர் எடை குறைவாக இருந்தது. இதுகுறித்து காஸ் ஏஜென்சியிடம் புகார் தெரிவித்த போது பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்து, நிர்மல் காளிநாத்திற்கு இழப்பீடாக ரூ.20,000, வழக்கு செலவு ரூ.5,000 வழங்க உத்தரவிட்டது. உங்க வீட்டு சிலிண்டரை செக் பண்ணுங்க(SHARE பண்ணுங்க)

error: Content is protected !!