News March 25, 2025
153 ஆண்டுகால சாதனை படைத்த ரொனால்டோ!

153 ஆண்டுகால கால்பந்து விளையாட்டில், நட்சத்திர ஆட்டக்காரர் ரொனால்டோ மாபெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். சர்வதேச தேச போட்டிகளில் அவர் 218 போட்டிகளில் விளையாடி, இதுவரை 132 வெற்றிகளை பதிவு செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 200 போட்டிகளுக்கு மேல் விளையாடிய ஒரே வீரரும் அவரே. இதற்கு முன்னர் ஸ்பெயினின் செர்ஜியோ ராமோஸ் 180 போட்டிகளில் விளையாடி 131 வெற்றிகளை பதிவு செய்திருந்தார்.
Similar News
News October 21, 2025
இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?

Women’s CWC-ல், இந்தியா ஹாட்ரிக் தோல்வியை தழுவியதால் அரையிறுதி வாய்ப்பு மங்கியுள்ளது. அடுத்ததாக நியூசிலாந்து, வங்கதேசத்தை எதிர்கொள்ளும் இந்தியா, அவற்றில் வென்றால் அரையிறுதிக்கு தகுதி பெறும். நியூசிலாந்திடம் தோற்றாலும் ரன் ரேட்டை பாஸிட்டிவாக தக்க வைத்தால் வங்கதேசத்துடன் வெற்றி பெறுவது போதுமானது. 2 போட்டிகளிலும் தோற்றால், நியூசிலாந்து 4-வது அணியாக அரையிறுதிக்கு முன்னேறும்.
News October 20, 2025
சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டு வர இதை பண்ணுங்க

சர்க்கரை நோயை மருந்து மாத்திரைகள் மூலமாக மட்டுமே கட்டுப்படுத்த முடியாது. அதற்கு சரியான உணவுகளை எடுத்துக் கொள்வதும் அவசியம். குறைவான கிளைசெமிக் எண் கொண்ட உணவுகளை சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதுடன், நீண்ட கால ஆரோக்கியத்தையும் பெறலாம். அந்த வகையில், நிபுணர்கள் பரிந்துரைக்கும் உணவுகளை மேலே போட்டோக்களை Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
News October 20, 2025
தீபாவளியன்று அயராத பணியில் நல் உள்ளங்கள்

தீபாவளி பண்டிகையை நாமெல்லாம் உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், குறிப்பிட்ட சில துறையை சேர்ந்தவர்கள் விடுப்பின்றி பணி செய்கின்றனர். டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போக்குவரத்து ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள், போலீஸ், தீயணைப்பு துறையினர் இன்று அர்ப்பணிப்போடு கடமையை செய்து வருகின்றனர். நமக்காக பணியாற்றும் இந்த நல் உள்ளங்களுக்காக லைக் போட்டு நன்றி தெரிவிக்கலாமே.