News March 25, 2025

ஐந்து வயது மேற்பட்ட குழந்தைகளின் விரல் பதிவு அவசியம்!

image

நாகப்பட்டிணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அவர்களின் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் விரல் ரேகையை அருகில் இருக்கும் ரேஷன் கடைகளில் பதிவு செய்வது அவசியம் என்றும், இதனை இந்த மாதம் 31ஆம் தேதிக்குள் செய்ய வேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் அறிவித்திருக்கிறார். தெரிந்தவர்கள் பயனடைய உடனே அனைவருக்கும் ஷேர் செய்யுங்கள்.. 

Similar News

News November 6, 2025

நாகை: எழுத்தாளர்களுக்கு உதவித்தொகை

image

ஆதிதிராவிடர், பழங்குடியினர் சமூகத்தில் கலை, இலக்கிய மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 -25 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஆதிதிராவிடர் பழங்குடியினர் எழுத்தாளர்களுக்கு உதவித் தொகை வழங்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு தலா ரூ.100000 வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து நவ.17க்குள் வழங்குமாறு ஆட்சியர் தெரிவித்தார்

News November 6, 2025

நாகை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாகப்பட்டினம் 163 பாகம் நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்காளர்களுக்கு வீடு வீடாக வழங்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ், இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News November 6, 2025

நாகை: பெண் குழந்தை உள்ளதா? விண்ணப்பியுங்கள்!

image

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு நாகை மாவட்ட சமூக நல அலுவலர் தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!