News March 25, 2025
தொடர்ந்து குறையும் தங்கம் விலை

ஜெட் வேகத்தில் உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் தங்கம் விலை ₹680 குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மேலும், பங்குச் சந்தையும் ஏற்றம் கண்டுள்ளதால் வரும் நாள்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
Similar News
News October 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 15, 2025
இதில் மறைந்திருக்கும் எண் என்னவென்று தெரிகிறதா?

ஒரு குட்டி கேம் விளையாடலாம். மேல் உள்ள புகைப்படத்தில் மறைந்திருக்கும் எண் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்களுக்கு தெரியும் எண்ணை கமெண்ட் செய்யுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து, அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்கள்.
News October 15, 2025
முக்கிய ஆஸி. வீரர்கள் விலகல்: இந்தியாவுக்கு சாதகமா?

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ODI மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19-ம் தேதி தொடங்குகிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஆடம் ஜாம்பா மற்றும் ஜோஷ் இங்லிஷ் விலகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.