News March 25, 2025

தங்கம் விலை ₹240 குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 3வது நாளாக குறைந்ததால், நகை பிரியர்கள் நிம்மதியடைந்துள்ளனர். 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹240 குறைந்து ₹65,480க்கும், கிராமுக்கு ₹30 குறைந்து ₹8,185க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ₹110க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Similar News

News March 31, 2025

இதுவல்லவோ உண்மையான வெற்றி! ❤️❤️

image

CSKக்கு எதிரான நேற்றைய போட்டியில் RR மெகா வெற்றியை பதிவு செய்தது. ரியான் பராக் கேப்டன்சியில் பெரும் முதல் வெற்றியும் இதுதான். இந்த சூழலில், சிறுவயது பராக், தோனியுடன் எடுத்துக் கொண்ட போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக இருந்த ஒருவரின் அணியை வீழ்த்துவதை விட உண்மையான வெற்றி என்ன இருந்துவிட போகிறது என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

News March 31, 2025

எடப்பாடி பழனிசாமிக்கு பாஜக புதிய நெருக்கடி?

image

ஏப்.6-ஆம் தேதி தமிழகம் வரும் PM மோடியை சந்திக்க இபிஎஸ்க்கு BJP நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட OPS,TTV, சசிகலா ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும், அண்ணாமலை தலைமையிலான பாஜகவை ஏற்க வேண்டும் என்றும் அழுத்தம் கொடுக்கப்படுகிறதாம். இதனால், தனது நலன் விரும்பிகளுடன் விரைவில் ஆசோசனை நடத்த EPS திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உங்கள் கருத்து என்ன?

News March 31, 2025

இன்று MI vs KKR: வெற்றி யாருக்கு?

image

12 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் MI vs KKR அணிகள் இன்று மோத உள்ளன. மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெற உள்ளது. தொடர்ந்து 2 போட்டிகளில் தோல்வியடைந்த பிறகு நடைபெறும் போட்டி என்பதால், சொந்த மண்ணில் வெற்றி பெற மும்பை அணி முயற்சிக்கும். அதேபோல், 2 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி பெற்றுள்ள கொல்கத்தா அணி, இன்றைய போட்டியில் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டும்.

error: Content is protected !!