News March 25, 2025
நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்தது!!

பிரபல நடிகை எமி ஜாக்சனுக்கு 2வது குழந்தை பிறந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக் (37) என்பவரை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொண்டார் எமி ஜாக்சன். தங்களுக்கு பிறந்துள்ள ஆண் குழந்தையுடன் இருக்கும் அழகிய போட்டோவை எமி தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். குழந்தைக்கு ஆஸ்கார் அலெக்சாண்டர் வெஸ்ட்விக் என பெயர் சூட்டியுள்ளனர். இருவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
Similar News
News March 31, 2025
கோடை மழை வெளுக்கப் போகுது

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கோடை மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களில் கனமழையை எதிர்பார்க்கலாம் என்று கூறியிருக்கும் அவர்கள், இதனால் வெப்பம் சற்று தணியும் என்றும் தெரிவித்துள்ளனர். வழக்கமாக, ஏப்ரல் – மே மாதங்களில் பெய்யும் கோடை மழையை விட இந்தாண்டு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 31, 2025
மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. நாளை முதல் IT இல்லை

புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்துக்கும் மேல் சம்பளம் ஈட்டுவோர் IT செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இனி ஆண்டுக்கு ரூ.12 லட்சம், அதாவது மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
News March 31, 2025
நாளை முதல் 18 நாள்களுக்கு ஐயப்பனை தரிசிக்கலாம்…!

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சபரிமலை கோயில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி நாளை மாலை நடை திறக்கப்பட்டு, நாளை மறுநாள் காலை கொடியேற்றப்பட உள்ளது. இந்த திருவிழா 10 நாள்கள் நடைபெறும் நிலையில், சித்திரை விஷு பண்டிகைக்காகவும் சேர்ந்து மொத்தம் 18 நாள்கள் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.