News March 25, 2025
ஜப்தி செய்யப்பட்ட பொருட்கள் ஏப்.3-இல் பொது ஏலம்

ரயில்வேக்கு நிலம் கொடுத்த சேலம் அமானி கொண்டலாம்பட்டி உள்ளிட்ட 15 குடும்பங்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை ரூபாய் 30 லட்சம் இதுவரை கிடைக்கவில்லை. அதனால் ஜப்தி பொருட்கள் ஏலத்துக்கு வருகிறது. வாதி, பிரதிவாதி தவிர யார் வேண்டுமானாலும் ஏலத்தில் கலந்து கொண்டு பொருட்களை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். ஏப்.03- ம் தேதி காலை 10 முதல் மாலை 05.45 மணிக்குள் சேலம் அஸ்தம்பட்டி நீதிமன்ற வளாகத்தில் ஏலம் நடக்கிறது
Similar News
News September 14, 2025
சேலம் ரயில்வே கோட்டத்தின் அறிவிப்பு!

ரயில் தண்டவாள மறுசீரமைப்பு பணிகள் காரணமாக போத்தனூர்- மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66612), மேட்டுப்பாளையம்- போத்தனூர் மெமு ரயில் (66615) ஆகிய ரயில் சேவைகள் இன்று (செப்.14) முழுவதும் ரத்துச் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. ரயில் பயணிகள் மாற்று ஏற்பாடுகளை செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News September 14, 2025
சேலம்: 8 மாதங்களில் 2,104 பேருக்கு நாய்க்கடி!

சேலம்: ஆத்துார்,தலைவாசல்,கெங்கவல்லி,எடப்பாடி,மேட்டூர்,ஓமலூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த, 8 மாதங்களில் மட்டும் 2,104 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். மக்களே , தெரு நாய்கள் தொந்தரவு இருந்தால் உடனடியாக 0427-2212844 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். இதனை ஷேர் பண்ணுங்க!
News September 14, 2025
சேலம்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.