News March 25, 2025
திருவாரூர் மாணவர்களுக்கு நற்செய்தி

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.
Similar News
News September 17, 2025
திருவாரூர்: ரூ.47.000 சம்பளத்தில் அரசு வேலை!

திருவாரூர் மக்களே மத்திய அரசு வேலைக்கு செல்ல ஆசை இருக்கா? Union Public Service Commission (UPSC) காலியாக உள்ள Accounts Officer பதவிக்கான அறிவிப்பு வந்துள்ளது.
⏩மத்திய அரசு வேலை
✅நிறுவனம்: (UPSC)
✅பதவி: Accounts Officer
✅கல்வித்தகுதி: இளங்கலை பட்டம்
✅சம்பளம்: ரூ.47.000
✅வயது வரம்பு: 21 முதல் 50 வரை
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க. <
✅கடைசி நாள் 02.10.2025
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
News September 17, 2025
திருவாரூர்: கீழவீதியில் விஜய் பிரச்சாரம்!

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 13ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வரும் செப்.,20-ம் தேதி சனிக்கிழமை திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக திருவாரூர் மாவட்ட காவல்துறையிடம் நேற்று தவெகவினர் மனு அளித்த நிலையில் இன்று காவல்துறை சார்பில் கீழ வீதி பகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (செப்.16) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவல் அலுவலர்களின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி இரவு நேர குற்றங்களை தடுக்க அல்லது காவல்துறையின் உடனடி உதவிக்கு இரவு ரோந்து காவலர்களை அழைக்கலாம் என திருவாரூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.