News March 25, 2025

அதிக மாத்திரைகளை உட்கொண்டவர் பலி

image

திருவண்ணாமலை தெள்ளார் பகுதி அஸ்தினாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம் (55). கூலித் தொழிலாளியான இவர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இவர் நேற்று (மார்ச்.24) அதிகமான மாத்திரைகளை உண்டு சுருண்டு விழுந்துள்ளார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தெள்ளார் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 15, 2026

தி.மலை: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (15.01.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்.

News January 15, 2026

தி.மலை: பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

image

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.

News January 15, 2026

BREAKING: வந்தவாசியில் பயங்கர விபத்து.. 2 பலி!

image

தி.மலை மாவட்டம், வந்தவசி அருகே இன்று மாலை சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது கண்டெய்னர் லாரி மோதியது. இந்த விபத்தில் பைக்கில் பயணம் செய்த இருவரும் தூக்கி வீசப்பட்டுச் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடல்களைக் கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர். பொங்கல் தினத்தன்று நடைபெற்ற இந்த விபத்தால் அந்தப் பகுதியில் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!