News March 25, 2025

போஸ்ட் ஆபீஸ் வேலை: நீங்க பாஸா

image

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் சேலம் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <>இங்கு கிளிக் <<>>செய்க. இதில் ஊதியம் ரூ.12,000 முதல் ரூ.29,000 வரை வழங்கப்படும். ( SHARE பண்ணுங்க)

Similar News

News January 14, 2026

சேலம்: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

image

சொந்தமாக ஒரு கடை வைக்கவோ, தொழில் தொடங்கவோ கையில் பணம் இல்லையே என்று கவலைப்படுபவர்களுக்கு ஒரு சூப்பர் திட்டம் உள்ளது. UYEGP திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் வரை கடனும், 25% மானியமும் வழங்கப்படுகிறது. 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதும். தகுதியுள்ளோர் www.msmeonline.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறலாம்.இந்த சூப்பரான தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.

News January 14, 2026

80 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்

image

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, சேலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பணியாற்றி வரும் 80 காவல் ஆய்வாளர்களை (Inspectors) இடமாற்றம் செய்து சேலம் சரக டி.ஐ.ஜி (DIG) சந்தோஷ் ஹடிமணி இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News January 14, 2026

தாரமங்கலம்: வயிற்று வலியால் பெண் விபரீத முடிவு!

image

தாரமங்கலம் குருக்குப்பட்டியைச் சேர்ந்த சரஸ்வதி (55), அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஒரு ஆண்டாகக் கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், நேற்று மதியம் மனவேதனையில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அவரது கணவர் மாரியப்பன் அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!