News April 2, 2024
பிரதமர் மோடி எப்போது வாயை திறப்பார்?

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களின் பெயர் மாற்றம் குறித்து எம்.பி.கனிமொழி தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “அருணாச்சல பிரதேசத்தின் பெயரை மாற்றும் அளவிற்கு நம் நாட்டிற்குள் சீனாவை ஊடுருவ, பாஜக அரசு அனுமதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை அடைமானம் வைத்துவிட்டதா பாஜக?. தமிழகத்தில் வாக்குக்காக அவதூறுகளைப் பரப்பும் மோடி, சீன எல்லை பிரச்னை குறித்து எப்போது வாய் திறப்பார்?” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 25, 2026
இன்று அறிவிக்கப்பட இருக்கும் பத்ம விருதுகள்!

கலை, இலக்கியம் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்திய அரசின் சார்பில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2026ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது.
News January 25, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 591 ▶குறள்: உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. மறை. ▶பொருள்: ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார்.
News January 25, 2026
டி20 WC புதிய அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

வங்கதேச அணி வெளியேறியதை அடுத்து பிப்.7 முதல் தொடங்கவுள்ள டி20 WC தொடருக்கான புதிய அட்டவணையை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி குரூப் C-யில் இங்கிலாந்து, இத்தாலி, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் ஆகிய அணிகளுடன் <<18945660>>ஸ்காட்லாந்து அணி<<>>, வங்க தேசத்திற்குப் பதிலாக இடம்பெற்றுள்ளது. அணி மட்டுமே மாறியுள்ள நிலையில், போட்டித் தேதி, நேரம் உட்பட வேறு எதுவும் மாறவில்லை. புதிய அட்டவணையை காண வலது பக்கம் Swipe செய்யவும்.


