News March 25, 2025
திருப்பூரில் விவசாயிகள் 43 பேர் மீது வழக்கு

பஞ்சாப் மாநிலத்தில் விவசாய சங்க தலைவர்கள் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நேற்று முன்தினம் திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ரயிலை மறித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சட்டத்தைச் சேர்ந்த 43 பேர் மீது திருப்பூர் வடக்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 23, 2025
திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழை நிலவரம்!

திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களில் அடிக்கடி மழை பெய்தது. மாவட்டத்தின் உடுமலைப்பேட்டை, பல்லடம், அவிநாசி, காங்கேயம், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்த நிலையில், வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, திருப்பூர் மாவட்டத்தில் பெய்த மழைகளில் வெள்ளகோவில் பகுதி அதிகபட்ச மழைப்பொழிவை பெற்றுள்ளது.
News October 23, 2025
திருப்பூர்: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY NOW

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம்!
மொத்த பணியிடங்கள்: 2,708
கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
News October 23, 2025
திருப்பூர்: கார் மோதியதில் முதியவர் உயிரிழப்பு

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூரில் தனியார் பெட்ரோல் பங்க் அருகே நேற்று இரவு அடையாளம் தெரியாத கார் மோதியதில், 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி அறிந்த அவிநாசிபாளையம் போலீசார் இறந்தவரின் உடலை கைப்பற்றி உயரிழந்தவர் யார் ? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.