News March 25, 2025
பள்ளி ஆண்டு விழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி

ஆம்பூர், துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 22ஆம் தேதி இரவு பள்ளி ஆண்டு விழா நடைப்பெற்றது. விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவி சுவிதாவின் கணவர் கணேஷ் என்பவரும் பங்கேற்றார். சரித்திர பதிவேடு குற்றவாளியான அவர் பள்ளி ஆண்டு விழாவில் பங்கேற்றதும், குத்து பாடலை பாடியதுமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 19, 2026
திருப்பத்தூர்: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.
News January 19, 2026
திருப்பத்தூர்: மின் தடை புகாரா? மின்னல் வேகத்தில் தீர்வு!

திருப்பத்தூர் மக்களே உங்கள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News January 19, 2026
திருப்பத்தூர் மாவட்ட புதிய காங்கிரஸ் தலைவர் நியமனம்

திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக வாணியம்பாடி பகுதியை சேர்ந்த முன்னாள் எம்.பி ஜெயமோகன் மகன் விஜய் இளஞ்செழியன் திருப்பத்தூர் மாவட்ட தலைவராக நேற்று (ஜனவரி 18) மாலை நியமிக்கப்பட்டார். இவருக்கு ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ஆகிய 4 தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.


