News March 25, 2025

கனிமொழி குற்றச்சாட்டுக்கு வானதி சீனிவாசன் பதில்

image

தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை கொண்டு வந்ததே பிரதமர் மோடிதான் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். KV பள்ளிகளில் தமிழாசிரியர்கள் இல்லை என்ற கனிமொழி குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர்,
புதிய கல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்த பிறகு, நிரந்தர தமிழாசிரியர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்றார். அந்தெந்த மாநில மொழி பாடங்கள் KV பள்ளிகளில் கற்றுத்தரப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Similar News

News March 30, 2025

பள்ளி விடுமுறையில் மாற்றம்

image

தமிழ்நாட்டில் ஏற்கெனவே 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில், ஏப்ரல் 15ஆம் தேதியுடன் 10ஆம் வகுப்பு தேர்வுகளும் நிறைவு பெறவுள்ளன. 1 முதல் 5ஆம் வகுப்பினருக்கான தேர்வுகளையும் ஏப்ரல் 17ஆம் தேதிக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஏப்ரல் 24ஆம் தேதி வரை தேர்வுகள் உண்டு. வெயிலின் தாக்கத்தினால் இதிலும் மாற்றம் வருமா?

News March 30, 2025

செம்பொன் சிலையோ…. இவள் ஐம்பொன் அழகோ..

image

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது வெளியிட்டுள்ள போட்டோஷூட் படங்கள் இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளது. கருப்பு நிற புடவையில், அவரின் அழகு கொள்ளை கொள்கிறது. ‘என்ன் பொண்ணுடா’ என நெட்டிசன்கள் உருகிப்போய் கமெண்ட் செய்து வருகின்றனர். இது Jfw விருது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வதற்கு முன்பாக, அவர் நடத்திய போட்டோஷூட் ஆகும்.

News March 30, 2025

அதிரடி வீரர்களை சுருட்டிய டெல்லி.. 3பேர் காலி

image

SRH டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது. இதில் முதல் ஓவரிலேயே அபிஷேக் சர்மாவை, விப்ராஜ் ரன் அவுட்டாக்கினார். தொடர்ந்து 3வது ஓவரை ஸ்டார்க் வீச அதில் முதல் பந்தில் இஷான் கிஷனும், 3வது பந்தில் நிதிஷ் ரெட்டியும் ஆட்டம் இழந்தனர். முதல் போட்டியில் அதிரடி காட்டிய SRH, கடந்த போட்டியில் தோல்வி கண்ட நிலையில் இப்போட்டியிலும் தடுமாறி வருகிறது. 3 ஓவரில் 29 ரன்களை SRH எடுத்து விளையாடி வருகிறது.

error: Content is protected !!