News March 25, 2025
யஷ்வந்த் வர்மாக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம்

டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை அலகாபாத்திற்கு பணியிடமாற்றம் செய்ய அம்மாவட்ட வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நீதிபதியை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும், அலகாபாத் நீதிமன்றத்தில் பணியாற்ற கூடாது என வலியுறுத்தியும் வழக்கறிஞர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். முன்னதாக, நீதிபதி வீட்டில் இருந்து பலகோடி ரூபாய் பணம் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டது.
Similar News
News March 31, 2025
ரம்ஜான் பிரியாணி சாப்ட்டீங்களா?

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் கொண்டாடுகின்றனர். இன்றைய தினம், இஸ்லாமிய தோழர்கள் தங்களது வீடுகளில் கறி பிரியாணி சமைத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். இஸ்லாமியர்களும் இந்துக்களும் இணைந்து வாழும் நமது நாட்டில், அந்த பிரியாணியை இந்துக்கள்தான் விரும்பி சாப்பிடுகின்றனர். உங்கள் பாய் நண்பர் உங்களுக்கு பிரியாணி கொடுத்தாரா? உரிமையா கேட்டு வாங்குங்க.
News March 31, 2025
விடுபட்டோருக்கு மகளிர் உரிமைத் தொகை எப்போது?

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக Dy CM உதயநிதி சட்டப்பேரவையில் அறிவித்து இருந்தார். இந்நிலையில், தகுதியுடைய பெண்களிடம் இருந்து 3 மாதத்தில் மனுக்கள் பெறப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மனுக்களை ஆராய்ந்து நிச்சயமாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.
News March 31, 2025
உயிரை தியாகம் செய்யத் தயார்.. மம்தா பானர்ஜி உருக்கம்

அனைத்து மத நலன்களுக்காக உயிரை தியாகம் செய்ய தயாராக இருப்பதாக மம்தா தெரிவித்துள்ளார். ரமலான் பண்டிகையையொட்டி நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், கலவரத்தில் மக்கள் ஈடுபடுவதில்லை, அரசியல் கட்சியினரே ஈடுபடுகின்றனர். இது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றார். சிறுபான்மையினரை பாதுகாப்பது பெரும்பான்மையினரின் கடமை எனவும், பெரும்பான்மையினரோடு சேர்ந்து வாழ்வது சிறுபான்மையினர் கடமை என்றும் கூறினார்.