News March 25, 2025
சவுக்கு சங்கரின் வீட்டின் மீதான தாக்குதல்: திருமா கண்டனம்

சவுக்கு சங்கரின் வீட்டின் மீது நடைபெற்ற தாக்குதல் அநாகரிகத்தின் உச்சம் என விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் அனைவரின் மீதும் காவல்துறை நடவடிக்கை வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News January 14, 2026
விடுமுறை காலத்திலும் ₹10,000: அன்பில் மகேஸ்

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்காலிகமாக மட்டுமே ₹2,500 உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் <<18854282>>அன்பில் மகேஸ்<<>> தெரிவித்துள்ளார். மேலும், பகுதி நேர ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கையான ‘முழுநேர ஊழியராக மாற்றம் செய்யப்பட வேண்டும்’ என்பதை சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும், மே மாதம் விடுமுறை காலத்தில் ஊதியமாக ₹10,000 வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
News January 14, 2026
பொங்கலும்.. இந்தியாவின் ஸ்பெஷல் உணவுகளும்!

இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. நம்மூரில் சர்க்கரை பொங்கல் எப்படி ஃபேமஸோ, அதேபோல ஒவ்வொரு ஊருக்கும் ஸ்பெஷல் டிஷ் ஒன்னு இருக்கு. அப்படி பல மாநிலங்களிலும் பொங்கலன்று தவறாமல் சமைக்கப்படும் உணவுகளின் லிஸ்ட்டை கொண்டுவந்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து அவற்றை தெரிந்துகொள்ளுங்க. உங்க வீட்டில் பொங்கலுக்கு என்ன ஸ்பெஷல்?
News January 14, 2026
சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு: மாணிக்கம் தாகூர்

PM மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில், <<18853976>>’பராசக்தி’<<>> படக்குழுவும் பங்கேற்றிருந்தது. இதை சுட்டிக்காட்டி, ‘சங்கிகுழு பொங்கலில் பராசக்தி குழு; ஆக ஜனநாயகன் blocked’ என்று மாணிக்கம் தாகூர், பதிவிட்டுள்ளார். முன்னதாக ‘பராசக்தி’ படம் தோல்வி என்றும் அவர் கூறியிருந்தார். சமீபகாலமாகவே ஆட்சியில் பங்கு, விஜய்க்கு ஆதரவு என அவர் பேசுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், மீண்டும் சர்ச்சை கருத்தை பதிவிட்டுள்ளார்.


