News March 25, 2025
சவுக்கு சங்கர் வீடு சூறை: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

யூடியூபர் சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூய்மை பணியாளர் குறித்து அவதூறாக பேசியதாக கூறி அவரது வீட்டில் நுழைந்த சிலர் பொருட்களை சூறையாடினர். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், டிஜிபி சங்கர் ஜிவால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 31, 2025
யார் இந்த அஸ்வனி குமார்?

KKR அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் மும்பை வீரர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வெறும் 23 வயதாகும் இவருக்கு இதுதான் முதல் போட்டியாகும். இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், முதல் போட்டியிலேயே, 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதித்திருக்கிறார். மும்பை அணி இவரை வெறும் 30 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
News March 31, 2025
இனி 3 நாள்களில் PF பணம் பெறலாம்

PF பணத்தை வெளியே எடுக்க விரும்புவோர், அதற்காக பல நாள்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. இதனை தீர்க்கும் வகையில், இனி 3 நாள்களில் பணம் எடுக்கும் வசதியை PF நிறுவனம் தொடங்கியுள்ளது. இத்திட்டம் நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதிகபட்சம் ஒரு லட்ச ரூபாய் வரை பணம் எடுக்க விரும்புவோர், ஆன்லைனில் அப்ளை செய்தால் அடுத்த 3 நாள்களில் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும்.
News March 31, 2025
116 ரன்களில் KKR ஆல்-அவுட்

மும்பைக்கு எதிரான இன்றைய IPL போட்டியில் KKR அணி, வெறும் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். இதனால், பேட்டிங் செய்த KKR அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதிகபட்சமாக ரகுவன்ஷி 26 ரன்கள் எடுத்தார். மும்பை பவுலர் அஸ்வனி குமார் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.