News March 25, 2025
இன்றைய பொன்மொழிகள்

▶சிந்திப்பவன் மனிதன்; சிந்திக்க மறுப்பவன் மதவாதி; சிந்திக்காதவன் மிருகம்; சிந்திக்கப் பயப்படுகிறவன் கோழை. ▶மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான். ▶ ஓய்வு, சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன். ▶ஒருவன் தன் தேவைக்கு மேலே எடுத்துக் கொள்ளாவிட்டால் எல்லோருக்கும் வேண்டியவை கிடைத்துவிடும். ▶ஆயுதமும் காகிதமும் பூஜை செய்ய அல்ல, புரட்சி செய்ய.
Similar News
News March 31, 2025
மாதம் ரூ.1 லட்சம் சம்பளம்.. நாளை முதல் IT இல்லை

புதிய வருமான வரி திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு ரூ.7 லட்சத்துக்கும் மேல் சம்பளம் ஈட்டுவோர் IT செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயர்த்தப்பட்டது. இது நாளை (ஏப்ரல் 1) முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி, இனி ஆண்டுக்கு ரூ.12 லட்சம், அதாவது மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் பெறுவோர் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை.
News March 31, 2025
நாளை முதல் 18 நாள்களுக்கு ஐயப்பனை தரிசிக்கலாம்…!

ஐயப்ப பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை சபரிமலை கோயில் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழாவையொட்டி நாளை மாலை நடை திறக்கப்பட்டு, நாளை மறுநாள் காலை கொடியேற்றப்பட உள்ளது. இந்த திருவிழா 10 நாள்கள் நடைபெறும் நிலையில், சித்திரை விஷு பண்டிகைக்காகவும் சேர்ந்து மொத்தம் 18 நாள்கள் கோயில் திறந்திருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2025
பழம்பெரும் நடிகர் காலமானார்

ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகர் ரிச்சர்ட் சாம்பர்லின்(90) வயது மூப்பு காரணமாக காலமானார். 3 முறை கோல்டன் குளோப் விருதுபெற்ற இவர், அமெரிக்கர்களின் வீடுகளில் நன்கு அறியப்பட்ட நடிகராக இருந்தார். டாக்டர் கில்தார், ஷோகன் போன்ற சீரிஸ்கள் மூலம் இவர் புகழ்பெற்றார். இவரது படங்களில் The Three Musketeers, The Count of Monte Cristo, The Man in the Iron Mask, The Swarm ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும்.