News March 25, 2025
‘சிந்து சமவெளி’ பட பாணியில் நடந்த பயங்கரம்!

அமலா பால் நடித்த ‘சிந்து சமவெளி’ படத்தில், எப்படி மாமனாருக்கும், மருமகளுக்கும் இடையே தகாத உறவு இருக்குமோ, அதேபோன்ற சம்பவம் உ.பி.யில் நடந்துள்ளது. அங்குள்ள பஹ்பத் மாவட்டத்தைச் சேர்ந்த வேத்பால் (34) என்பவர், தனது மனைவிக்கும், தந்தை ஈஸ்வருக்கும் இடையே தகாத உறவு இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அப்பாவே தனக்கு துரோகம் செய்ததை தாங்க முடியாமல், நேற்று ஈஸ்வரை கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் வேத்பால்.
Similar News
News March 31, 2025
செவ்வாய் பெயர்ச்சி… இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்!

செவ்வாய் பகவான் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு ஏப்.3-ஆம் தேதி இடம்பெயர்கிறார். இதனால், 4 ராசிக்காரர்களின் வாழ்க்கையே மாறப் போகிறதாம். 1) கடக ராசியினருக்கு முன்னேற்றத்திற்கான தடைகள் நீங்கும். 2) சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை அமையும். 3) கன்னி ராசியினருக்கு தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். 4) கும்ப ராசியினருக்கு பல்வேறு வழிகளில் வருமானம் பெருகும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.
News March 31, 2025
சிறாரை பணியில் அமர்த்தலாமா? கூடாதா?

சிறாரை பணியில் அமர்த்தினால் அளிக்கப்படும் தண்டனை குறித்து பிஎன்எஸ் சட்டத்தின் 95ஆவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில், சிறாரை பணியில் அமர்த்துவோருக்கு அபராதத்துடன் குறைந்தபட்சம் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதத்துடன் அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பிணையில் வெளிவர முடியாத குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 31, 2025
தமிழ்நாட்டில் வெப்ப அலை? – IMD அதிர்ச்சி ரிப்போர்ட்

தமிழ்நாட்டில் மார்ச் மாதமே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. கத்தரி வெயில் எப்படி இருக்கப் போகிறதோ என பலர் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், ஜூன் மாதம் வரை வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை பதிவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.