News March 25, 2025

திருச்சி எம்பி காவல்துறைக்கு கோரிக்கை

image

மன்னார்புரம் அருகே நேற்று பாஜக சார்பில் நடந்த பொது கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிக்கொண்டிருந்தபோது தொண்டர்கள் கலைந்து சென்றதை தனியார் பத்திரிக்கையின் புகைப்பட கலைஞர் படம் பிடித்ததால் அவரையும், தொலைக்காட்சி ஒன்றின் நிருபரையும் அங்கிருந்த பாஜகவினர் தாக்கினர். இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்ட பாஜக.வினர் மீது காவல் துறையினர் உரிய நடவடிக்கை எம்பி துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News December 1, 2025

திருச்சி: டூவீலரில் இருந்து விழுந்து பரிதாப பலி

image

திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரத்தை சேர்ந்தவர் வீரமணி (26). இவருக்கு ஒரு மனைவியும், 5 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று வீரமணி தன் தங்கையின் நிச்சயதார்த்த விழாவில் பங்கேற்கபதற்காக திருவெறும்பூர் நோக்கி சென்றுள்ளார். அப்போது திருவெறும்பூர் ரயில்வே பாலம் அருகே டூவீலரில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த அவர், பரிதாபமாக உயிரிழந்தார்.

News November 30, 2025

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு

image

திருச்சி மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில், லால்குடி பகுதி கல்லக்குடி 43.4 மில்லி மீட்டர், லால்குடி 38.4 மில்லி மீட்டர், புள்ளம்பாடி 61.6 மில்லி மீட்டர், தேவி மங்கலம் 27.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், சமயபுரம் 44 மில்லி மீட்டர், சிறுகுடி 30 மில்லி மீட்டர், நாவலூர் கொட்டுப்பட்டு 16.5 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.

News November 30, 2025

திருச்சி: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

image

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>இங்கு கிளிக்<<>> செய்து அதற்கான தகுதிகளை அறிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!