News March 25, 2025
குணால் கம்ரா விவகாரத்தில் கொந்தளித்த ஃபட்னவிஸ்

மகாராஷ்டிர Dy CM ஷிண்டே குறித்து தெரிவித்த கருத்துக்கு நகைச்சுவை பேச்சாளர் <<15866964>>குணால் கம்ரா<<>> மன்னிப்பு கேட்க வேண்டும் என CM தேவேந்திர ஃபட்னவிஸ் தெரிவித்துள்ளார். அரசியல் பதவிகளில் இருப்பவர்களை அவமதிப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாது என தெரிவித்த அவர், விளம்பரத்திற்காக இவ்வாறு செய்வதை குணால் கம்ரா வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News February 10, 2026
நீண்டகால பேன் தொல்லையால் 12 வயது சிறுமி பலி!

ஒடிசாவின் பூரி நகரில் நீண்டகால பேன் தொல்லை காரணமாக லட்சுமிப்ரியா சாஹூ என்ற 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில மாதங்களாகவே பேன் தொல்லையால் சிறுமி அவதிப்பட்டு வந்ததாகவும், பலகட்ட சிகிச்சை அளித்தும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை என்றும் அவரது குடும்பத்தினர் கூறினர். இதற்கிடையே சிறுமியின் மரணம் குறித்து மாவட்ட தலைமை, விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
News February 10, 2026
கார்களின் விலை மளமளவென குறைந்தது!

கார் வாங்க போறீங்களா? இந்த பிப்ரவரி மாதத்தில், ஹோண்டா தனது வெவ்வேறு மாடல் கார்களுக்கு தள்ளுபடி அறிவித்துள்ளது. அதிகபட்சமாக ₹2 லட்சம் வரை சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, என்னென்ன மாடல் கார்களுக்கு, எவ்வளவு சலுகை என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News February 10, 2026
காங்கிரஸிடம் CM பொறுமை காக்க இதான் காரணமா?

சீட் ஷேரிங்கில் திமுக கூட்டணிக்கு காங்., பெரும் நெருக்கடியாக மாறியிருக்கிறது. ஆனால், காங்., எவ்வளவு ஆட்டம் காட்டினாலும், எந்த ஆக்ஷனும் எடுக்காமல் இருக்கிறார் ஸ்டாலின். இதற்கு, இண்டியா கூட்டணியை கட்டமைத்த தானே அதை உடைத்துவிடக் கூடாது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதே காரணமாம். அதேநேரம் அவர்களுக்கான தொகுதிகளை உயர்த்தி வழங்கமுடியாது என்பதிலும் திமுக தலைமை உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.


