News March 24, 2025
அக்னிவீரராக வேண்டுமா? அப்போ உடனே இத பண்ணுங்க

அக்னிவீரர் ஆள்சேர்ப்பு குறித்து கோவை ராணுவ அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில் அக்னிவீரர் ஆட்சேர்ப்புக்கு தகுதிவாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார். கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் www.joinindianarmy.nic.in-ல் விண்ணப்பிக்கலாம். இதற்கு ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Similar News
News October 23, 2025
FLASH: பிஹார் CM வேட்பாளரை அறிவித்தது INDIA கூட்டணி

பிஹார் சட்டமன்ற தேர்தலில், INDIA கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். INDIA கூட்டணியில் கடும் போட்டி நிலவி வந்த நிலையில், வேட்பாளரை காங்., மூத்த தலைவர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். NDA சார்பில் CM வேட்பாளராக யாரும் களமிறக்கப்படவில்லை. இம்மாநிலத்துக்கான தேர்தல் நவ.6, 11-ல் நடக்கவுள்ளது.
News October 23, 2025
தங்கம் விலை ₹5,600 குறைந்தது.. CLARITY

கடந்த வாரத்தில் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம், கடந்த 5 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹5,600 சரிவைக் கண்டுள்ளது. இது வரும் நாள்களில் மேலும் சரியும் எனப் பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். தங்கம் விலை சரிவதற்கு பல்வேறு காரணங்களையும் அவர்கள் அடுக்கடுக்காக கூறுகின்றனர். தங்கம் விலை சரியக் காரணம் என்ன? என்பதை அறிய மேலே உள்ள போட்டோக்களை SWIPE செய்து பாருங்க.
News October 23, 2025
இந்த வார OTT விருந்து!

இந்த வார OTT விருந்தாக பல மொழிகளிலும், பல படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. அக்டோபர் 24-ம் தேதி வெளிவரும் படங்களின் லிஸ்ட் ✦சக்தித்திருமகன்(தமிழ்)- ஹாட்ஸ்டார், ✦அக்யூஸ்ட் (தமிழ்)- ஆஹா ✦பறை இசை நாடகம்(தமிழ்)- சன் NXT ✦OG(தெலுங்கு)- நெட்பிளிக்ஸ் ✦வல்சாலா கிளப்(மலையாளம்)- Manorama Max ✦Weapons(ஆங்கிலம்)- HBO MAX ✦The bike riders(ஆங்கிலம்)- அமேசான் ப்ரைம். நீங்க எந்த படம் பாக்க போறீங்க?