News March 24, 2025
கல்வி RSS கைக்கு சென்றால் நாடு அழிந்துவிடும்: ராகுல்

கல்வியை RSS கட்டுப்பாட்டில் எடுத்தால் இந்தியாவின் எதிர்காலம் அழிந்துவிடும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டத்தில் பேசிய அவர், RSS கையில் கொஞ்சம் கொஞ்சமாக கல்விமுறை செல்வதாகவும், அப்படி சென்றால் யாருக்கும் வேலை கிடைக்காது எனவும் எச்சரித்தார். வேலையின்மை குறித்து பிரதமர் பேசுவதே இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.
Similar News
News October 16, 2025
2026 தேர்தலில் விஜய்: ரகசிய கருத்துக்கணிப்பு வெளியானது

2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து நின்றாலும் 23% வாக்குகளை கைப்பற்றும் என திமுக நடத்திய ரகசிய சர்வேயில் தெரியவந்துள்ளதாக The Print தெரிவித்துள்ளது. கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்புகளுக்கு பின்பும், மக்களிடம் விஜய்யின் செல்வாக்கு குறையவில்லை என்பதையே இது காட்டுகிறது. ஒவ்வொரு தொகுதிக்கும் சராசரியாக 1,245 பேர் என மொத்தம் 2.91 லட்சம் பேரிடம் இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
News October 16, 2025
ஏன் மூன்று முறை ஆரத்தி காட்டுகிறோம் என தெரியுமா?

பொதுவாக கடவுளை வழிபடும் போது, 3 முறை கற்பூர ஆரத்தி காட்டுவோம். அது, கடவுளின் 3 நிலைகளை குறிக்கிறது. அதாவது, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைக் குறிக்கிறது. அதே நேரத்தில் இதற்கு வெவ்வேறு அர்த்தங்களும் உண்டு. முப்பெரும் தெய்வங்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் அல்லது 3 காலங்களான இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் போன்றவற்றையும் குறிக்கிறது எனவும் கூறப்படுகிறது. SHARE IT.
News October 16, 2025
வாட்ச் விலை இத்தனை கோடியா!

நேரம் மட்டுமே பார்ப்பதற்கென்று இருந்த வாட்ச் தற்போது இதய துடிப்பு வரையிலும் கணக்கிடுகிறது. அத்தியாவசிய பொருளாக தொடங்கிய அதன் பயணம், தற்போது அழகு மற்றும் ஆடம்பரத்திற்கான இடத்தை அடைந்துள்ளது. அந்த வகையில், உலகில் மிகவும் விலை உயர்ந்த வாட்ச்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம். வாயை பிளக்க வைக்கும் அதன் விலையை மேலே Swipe செய்து தெரிந்து கொள்ளுங்கள்.