News March 24, 2025
தவெகவினருக்கு விஜய் முக்கிய உத்தரவு

தவெக பொதுக்குழுக் கூட்டம் வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்தக் கூட்டத்துக்கு முன்பாக, மாவட்ட வாரியாக மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை உடனடியாக பட்டியலிட்டு சமர்ப்பிக்க தவெக மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் உத்தரவிட்டுள்ளார். மேலும், 2021 தேர்தலில் திமுக சார்பில் கொடுக்கப்பட்டு, இதுவரை நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளின் பட்டியலையும் வழங்குமாறு விஜய் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News December 24, 2025
திமுக கூட்டணியில் மேலும் ஒரு கட்சி இணைந்தது

நமது மக்கள் முன்னேற்றக் கழகம்(நமமுக) திமுக கூட்டணியில் இணைந்துள்ளது. ஸ்டாலினை நேரில் சந்தித்த அக்கட்சியின் நிறுவனர் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்ட நிர்வாகிகள் 2026 தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடுவதாக உறுதி அளித்தனர். அக்கூட்டணியில் ஏற்கெனவே காங்., விசிக, மதிமுக, இடதுசாரிகள், IUML, மநீம உள்ளிட்ட 16 கட்சிகள் உள்ள நிலையில், நமமுகவும் இணைந்தது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உங்க கருத்து?
News December 24, 2025
பறவை காய்ச்சல்: எல்லைகளில் உஷார் நிலை!

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது வேகமாக பரவி வருவதால், பாதிப்புள்ள பகுதிகளில் கோழி, முட்டை, காடை, வாத்து ஆகியவற்றை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக-கேரள எல்லைகளில் கோழிகள், இறைச்சிகளை ஏற்றி வரும் வாகனங்கள் கண்காணிக்கப்பட்டு வருவதோடு, தமிழக கோழிப் பண்ணைகளிலும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
News December 24, 2025
BREAKING: தங்கம் விலை மிகப்பெரிய அளவில் மாறியது

தங்கம் விலை கடந்த 3 நாள்களில் மட்டும் சவரனுக்கு ₹3,200 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 2 நாள்களாக உயர்ந்து வந்த தங்கம், இன்றும்(டிச.24) சவரனுக்கு ₹240 அதிகரித்து ₹1,02,400-க்கு விற்பனையாகிறது. <<18655289>>சர்வதேச சந்தையில்<<>> ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் விலை உயர்வால் இந்தாண்டு இறுதிக்குள்(டிச.31) சவரன் ₹1,05,000-ஐ தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கணித்துள்ளனர். SHARE IT.


