News March 24, 2025
ஜனநாயகன் படம் எப்போது ரிலீஸ்? – அறிவித்தது படக்குழு

தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக திகழும் நடிகர் விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’, 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜன. 9) வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி பட்டையை கிளப்பிய நிலையில், ரிலீஸ் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Similar News
News March 29, 2025
4 சுவர்களுக்குள் விஜய்யின் அரசியல்: கே.பி.முனுசாமி தாக்கு

விஜய் குறித்து இதுவரை வாய் திறக்காமல் இருந்த அதிமுக, நேற்றைய விஜய்யின் பேச்சுக்குபின், அவரை விமர்சிக்கத் தொடங்கிவிட்டனர். விஜய் மக்களை சந்திக்காமல், 4 சுவர்களுக்குள்ளேயே 2 ஆண்டுகால அரசியலை முடித்துவிட்டார் என கிருஷ்ணகிரியில் அதிமுக துணை பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அவர் மக்களை சந்தித்தால்தான் அரசியலை புரிந்துகொள்ள முடியும் எனவும் கூறியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News March 29, 2025
சனிப்பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஏழரை சனி

திருக்கணித பஞ்சாங்கத்தின்படி, இன்று இரவு 11.01 மணிக்கு சனிப்பெயர்ச்சி நடைபெறவுள்ளது. இன்று முதல் அடுத்த ஏழரை ஆண்டுகளுக்கு மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடைபெறவுள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கும், கும்ப ராசிக்காரர்களுக்கு அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கும் ஏழரை சனி நடைபெறவுள்ளது. 2027ஆம் ஆண்டு ரிஷப ராசிக்கு ஏழரை சனி தொடங்கும்.
News March 29, 2025
யாரும் நிகழ்த்தாத சாதனை… SIR ஜடேஜாவின் மாஸ்!

இதுவரை, IPL தொடரில் 3000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை எடுத்த ஒரே வீரர் என்ற வரலாற்றை ஜடேஜா படைத்துள்ளார். அவர் இதுவரை, 242 போட்டிகளில் 3,001 ரன்களும், 160 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஸ்பின் ஆல்ரவுண்டரான ஜடேஜா சென்னையின் அணியின் முக்கிய தூணாகவே இருக்கிறார்.